இறப்பு - தவிர்க்க முடியாத இழப்பு
மனிதன் இறந்ததும் அவனது செயல் முடிவடைந்து விடுகிறது, மூன்றைத்தவிர. 1) நிலையான தர்மம் 2) பயனுள்ள கல்வி 3) அவனுக்காக அவனது குழந்தை செய்யும் பிரார்த்தனை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்
இறந்து போன மய்யித்தை(சடலத்தை) (1) அவரது குடும்பம் (2) அவரது செல்வம் (3) அவரது நற்செயல்களும் தீய செயல்களும் ஆகிய மூன்றும் தொடர்ந்து செல்கின்றது. அவர் அடக்கப்பட்டவுடன் அவற்றில் இரண்டு திரும்ப வந்துவிடும், ஒன்று அவருடனே இருக்கும். அவரது குடும்பத்தாரும் அவரின் செல்வமும் திரும்பிவிடும். அவரின் நல்ல, தீய செயல்கள் மட்டும் அவருடன் இருக்கும். (எனவே நற்செயல்களையே செய்யுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்
இறந்தவர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதை அடைந்துவிட்டனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) - நூல்: புகாரி
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 2:156)