சுற்றம்

"ஒருவன் இறை நம்பிக்கையுடையவனாக ஆக மாட்டான்", என நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர் யார்?" எனக் கேட்கப்பட்டது. "எவனுடைய தொல்லையிலிருந்து அவனது அண்டை வீட்டுக்காரன் பயமற்றவனாக ஆகவில்லையோ அவன்" எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

"யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் தன் அண்டை வீட்டுக்காரைத் துன்புறுத்தாமல் இருக்கட்டும்", என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்)

"முஸ்லிம் பெண்மணிகளே! எந்த ஒரு பெண்ணும் தன் அண்டை வீட்டுப் பெண்ணைக் கேவலமாக நினைக்க வேண்டாம். ஆட்டின் குழம்பாக இருந்தாலும் அதையும் கொடுத்து அன்பு பாராட்டுங்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்)

"அபூதரே! நீர் குழம்பு சமைப்பீரானால் கொஞ்சம் தண்ணீரை அதிகரித்துக் கொள்ளும். உமது அண்டை வீட்டுக்காரருக்கு அது தேவைபடபடக்கூடும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதர்(ரலி) : முஸ்லிம்)

அண்டை வீட்டுக்காரரை அல்லாஹ் வாரிசுதாராரக ஆக்கிவிடுவானோ என நான் என்னும் அளவிற்கு அவர் விஷயத்தில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள். (அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவைகளோ, கால் நடைகளோ சாப்பிட்டால் மறுமை நாள்வரையும் அவன் செய்த தர்மமாக அது அமையும் என் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர்(ரலி) : புகாரி)

 



<< Home

This page is powered by Blogger. Isn't yours?