நோன்பு

நோன்பாளிக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்:
யார் பொய்யான பேச்சக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத், அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் "நான் நோன்பாளி" என்று அவர் கூறிவிடட்டும்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி) நூல்: திர்மிதீ

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகிறது. "நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன்" என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் (நோன்பு நோற்பதால் அவருக்கு ஏற்படும்) வாய் நாற்றம், அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் நறுமணத்தைவிடச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி) நூல்: திர்மிதீ

சுவர்க்கத்தில் ரய்யான்(தாகம் தீர்ப்பது) என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள்(மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நூழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லீம், திர்மிதீ

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி) நூல்: திர்மிதீ

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

 



<< Home

This page is powered by Blogger. Isn't yours?