முகமன் கூறுவோம் (ஸலாம் கூறுதல்)
நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வரை ஈமான் கொள்ள முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கத்துணை செய்யும் காரியத்தை நான் கூறட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்
வாகனத்தில்செல்பவர் நடப்பவருக்கும், நடப்பவர் அமர்ந்திருப்பவருக்கும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள், அதிக எண்ணிக்கையிலுள்ளவர்களுக்கும் ஸலாம் கூறவேண்டும். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்
நான் நபி(ஸல்) அவர்களிடம் ஸலாம் கூறாமல் நுழைந்தேன், அப்போது நபி(ஸல்) அவர்கள், ''நீ திரும்பிச் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் வரட்டுமா? என்று கேள்"" என்றார்கள். கில்தா(ரலி) - நூற்கள்: அபூதாவுத், திர்மிதீ
அருமை மகனே! நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு? அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக அமையும். (அனஸ்(ரலி) - நூல்: திர்மிதீ)யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவராவார். (அபூஉமாமா(ரலி) - நூல்: அபூதாவுத்)
நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றால் அவர்களுக்கும் ஸலாம் கூறுவார்கள். (அனஸ்(ரலி) - நூல்: புகாரி)
உங்களில் ஒருவர் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ நாடும் போது ஸலாம் கூறட்டும். (அபூஹுரைரா(ரலி) - நூல்: அபூதாவுத்)
இஸ்லாத்தில் சிறந்த அறம் எதுவென ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது (பசித்தோருக்கு) உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதாகும் என விடையளித்தார்கள். (அப்துல்லாஹ்பின் ஆஸ்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)