எளியோருக்கு இரங்குவீர்

"யார் மக்களுக்கு இரங்கவில்லையோ அவருக்கு இறைவன் இரங்க மாட்டான்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி), நூற்கள்: புகாரி,

முஸ்லீம் தனக்கு விரும்பக்கூடியதைத் தன் சகோதரனுக்காகவும் விரும்புகின்ற வரை உங்களில் எவரும் விசுவாசித்தவராக முடியாது என் நபி(ஸல்) கூறினார்கள்.
அனஸ்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லீம்

நான் தொழவைக்கத் தயாராகி அத்தொழகையை நீட்ட நாடுவேன். அந்த நேரத்தில் குழந்தையின் அழுகுரலைக்கேட்டு, அக்குழந்தையின் தாயாருக்கு சங்கடத்தை அளிக்கக்கூடாது என்பதற்காக தொழுகையைச் சுருக்கிக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அபூகதாதா(ரலி), நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் ஹஸன்(ரலி) அவர்களைக் கொஞ்சுவதைக் கண்ட அக்ரஃஇப்னு ஹாபில்(ரலி) அவர்கள் "எனக்கு பத்து குழந்தைகள் உள்ளனர். அவர்களில் எவரையும் நான் கொஞ்சியதில்லை" எனக் கூறினார். அவரை நபி(ஸல்) அவர்கள் நோக்கி "யார் இரங்கவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்" எனக் கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லீம்

கிராமப்புறத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து "உங்கள் குழந்தைகளை நீங்கள் கொஞ்சுவதுண்டோ?" என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் என்றனர். அப்போது அவர்கள் "அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் கொஞ்சுவது கிடையாது" என்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் "உங்கள் உள்ளங்களில் இருந்து அல்லாஹ் இரக்கத்தை அகற்றி விட்டால் என்ன செய்ய முடியும்" என்று கூறினார்கள்.
ஆயிஷா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லீம்

ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமின் சகோதரராவார். அவருக்கு அநீதி இழைக்கவேண்டாம்! (எதிரிகளிடம்) காட்டிக் கொடுக்கவும் வேண்டாம்! யார் தனது சகோதரனின் தேவையில் ஈடுபட்டிருக்கிறாரே அவரது தேவையை அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஒரு முஸ்லீமுக்கு எற்படும் கஷ்டத்தை ஒருவர் அகற்றினால் மறுமைநாளின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை அல்லாஹ் நீக்குகிறான். ஒரு முஸ்லீமின் தவறை ஒருவர் மறைத்தால் மறுமைநாளில் அவனது தவற்றை அல்லாஹ் மறைக்கிறான், என்று நபி(ஸல்) கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லீம்

தன் சகோதர முஸ்லீமை அற்பமாகக் கருதுவது ஒன்றே ஒருவனுக்கு கேட்டை ஏற்படுத்தப் போதுமானதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூஹுரைரா(ரலி), நூல்: திர்மிதீ

 



<< Home

This page is powered by Blogger. Isn't yours?